எமது தமிழ்த்துறை வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் மாணவர்களுக்கு கற்பித்து, அவர்களின் வளர்ச்சிக்கு எமது கல்லூரி முன்னோடியாக உள்ளது. எமது கல்லூரியில் நல்ல மாணவர்களை நாவலர்களை படைப்பாளர்களை உருவாக்குவது இத்துறையின் நோக்கமாகும். இதனடிப்படையில், மாணவர்களுக்கு வாசகர் வட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம், பயிலரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மொழிப்பாடம் பயிலும் மாணவர்களுக்கென்றே சிறப்பான மொழி ஆய்வகம் (Language Lab) செயல்படுகின்றது. மேலும் மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டு மொழிப்பாடத்துடன் கணினி பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.